M K Stalin
“தமிழின் தொன்மையைச் சிதைக்கும் சதிக்கு எதிராகப் போராட வேண்டும்” : மு.க.ஸ்டாலின் பேச்சு!
கவிஞர் வைரமுத்து எழுதிய 'தமிழாற்றுப்படை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நூலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், ஆத்திகம், நாத்திகம் என்ற வேறுபாடின்றி தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியவர்களை இந்த நூலில் வைரமுத்து பதிவு செய்திருப்பதாகப் பாராட்டினார்.
மேலும் பேசிய அவர், “கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், அற்ற குளத்தின் பறவை போல அல்லாமல், கொட்டியும் ஆம்பலும் எல்லா நிலையிலும் கலைஞரோடு ஒட்டியிருந்தவர். கவிப்பேரரசு எனும் பட்டமே கலைஞர் அவர்களால் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் வழங்கப்பட்டது தான்.
தமிழின் பெருமைகளைச் சிதைத்து, தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மத்திய அரசால் மும்மொழித்திட்டம் திணிக்கப்படும் நிலை வந்திருக்கிறது. இரயில்வே துவங்கி மத்திய அரசு நிறுவனங்களில் தமிழை ஒழித்துக்கட்டக்கூடிய வேலையைத் துவங்கியிருக்கிறார்கள்.
நாம் எல்லோரும் போராடவேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம். தமிழின் தொன்மையை சிதைக்கும் முயற்சியை தடுக்கும் போராட்டத்திற்கான ஆயுதமாக, தமிழாற்றுப்படை நூலை உருவாக்கியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.” எனத் தெரிவித்தார் மு.க. ஸ்டாலின்.
இந்நிகழ்வில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, வைகோவும் ஸ்டாலினும் ஒன்றாக இருக்கவேண்டிய கால கட்டத்தில் தமிழகம் உள்ளது. ஸ்டாலினின் வளர்ச்சியை வைகோ தடுக்கிறார் என்பதால் தான் அவர் தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்ற வசை இருந்தது. ஆனால் வைகோவை ஸ்டாலின் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கியதன் மூலம் அது துடைத்தெறியப்பட்டுள்ளது” எனப் பேசினார்.
Also Read
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!