M K Stalin
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் !
சென்னை தாம்பரம் அருகே குளிர்சாதனப்பெட்டி வெடித்த விபத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் திரு பிரசன்னா மற்றும் அவரது மனைவி, தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்போது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''குளிர்சாதனப்பெட்டி தீவிபத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் திரு பிரசன்னா, அவரது மனைவி திருமதி அர்ச்சனா, தாயார் ரேவதி ஆகியோர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர்கள் மூவரின் மறைவிற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இளம் வயதில் சுறுசுறுப்பாக செய்திகளை சேகரித்து- எதிர்காலத்தின் மீதான கனவுகளுடன் பணியாற்றி வந்த தொலைக்காட்சி செய்தியாளர் இப்படி ஒரு கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தது இதயத்தை கனக்க வைக்கிறது. அவரையும், அவரது மனைவி, தாயார் ஆகியோரையும் இழந்து வாடும் உறவினர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் '' இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Also Read
-
திமுக ஆட்சியில் குறைந்துவரும் கொலை வழக்குகள்... தினமலரே வெளியிட்ட ஆதாரம் - முரசொலி தலையங்கம் !
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!