M K Stalin
“நோட்டுக்காகவும், சீட்டுக்காகவும் கூட்டு சேர்ந்ததுதான் அதிமுக கூட்டணி” - மு.க.ஸ்டாலின்
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்தும், திருப்போரூர் இடைத்தேர்தல் சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இதயவர்மனை ஆதரித்தும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையின் போது மக்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்று பொய் வாக்குறுதி அளித்தே ஆட்சிக்கு வந்துள்ளார் மோடி
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பணமதிப்பிழப்பு போன்ற மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் சிறு, குறு வணிகள், தொழில் முனைவோர், விவசாயிகள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
2014 தேர்தல் பிரசாரத்தின் போது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாத பாஜகவின் மத்திய அரசு அம்பானி போன்றவர்களை மட்டுமே வாழ வைத்தது.
சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க. தற்போது பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவுடன் சீட்டுக்காக மட்டுமில்லாமல் நோட்டுக்காகவும் கூட்டு வைத்துள்ளது என மு.க.ஸ்டாலின் சாடினார்.
Also Read
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!
-
“அரசமைப்பு திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல; சர்வாதிகாரத்தின் தொடக்கம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி” : நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி அ.மணி கோரிக்கை!