M K Stalin

கொடநாடு குறித்து ஆதாரமில்லாமல் பேசவில்லை-மு.க ஸ்டாலின் பரப்புரை

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் சம்பத்குமாரை ஆதரித்து,இராமநாதபுரம் பெரியார் திடலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.அதில்,

பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தால் கூட அ.தி.மு.க ஆட்சி மீது குறை கண்டுபிடிக்க முடியாது என்கிறார் எடப்பாடி. சமீபத்தில் கூட்டணியில் சேர்ந்த பெரியய்யா ராமதாஸ் அ.தி.மு.க-வின் ஊழல் குறித்து புத்தகமே எழுதியிருக்கிறாரே?அதிமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில்,பொற்கால ஆட்சி வழங்குவோம் என்று கூறியுள்ளது.இதுவரை பொற்கால ஆட்சி அளிக்கவில்லை என அதிமுகவே ஒப்புக்கொண்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டால் பதவி விலகியதால் ஜெயலலிதா தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டது,அதைவிட பெரும் தலைகுனிவை எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு விவகாரத்தில் ஏற்படுத்திவிட்டார்.நான் கொடநாடு விவகாரம் குறித்து பேசக்கூடாது என்பதற்காக கோர்ட்டில் தடை கேட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.நான் ஆதாரமில்லாமல் பேசவில்லை.

மோடி காவலாளி தான் நாட்டிற்கு இல்லை,எடப்பாடி பழனிசாமிக்கு காவலாளியாக இருக்கிறார்.தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட மாட்டார்கள் என மோடி அளித்த உத்தரவாதத்தை காப்பாற்ற முடிந்ததா? மீனவர்களைப் பற்றிக் கவலைப்படாத பா.ஜ.க ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்.எனப் பேசினார்.