India

வாக்கு எண்ணிக்கை வீடியோவை காணவில்லை என எப்படி கூற முடிகிறது? : தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் காட்டம்!

கர்நாடக மாநிலம் சிருங்கேரி தொகுதியில் 2023ஆம் ஆண்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்கு எண்ணிக்கை வீடியோ காட்சிகளைக் காணவில்லை என்று பதிலளித்தார்.

இதனைக் கேட்ட உச்ச நீதிமன்றம் கடும் அதிர்ச்சி தெரிவித்தது. "தேர்தலை நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முக்கிய பணி. அதற்கான ஆவணங்களைப் பத்திரமாக பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

வீடியோவைத் தொலைத்துவிட்டதாக எப்படி கூற முடியும்? 'வீடியோவைத் தேடிக் கொண்டிருக்கிறோம்' என்று எப்படி உங்களால் கூற முடிகிறது? வீடியோ பதிவுகளைக் காணவில்லை என்று சாக்குப் போக்கு காரணங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டாம்" என்று கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர், தேர்தல் ஆணையம் வசம் உள்ள காட்சிகளை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிவரும் என்று எச்சரித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

Also Read: BoyFriend உடன் சேர்ந்து Blackmail.. மிரட்டி பணம் பறிப்பு.. தவெக பிரமுகர், BIGG BOSS வர்ஷினி வெங்கட் கைது!