India
வாக்காளர் பட்டியலை சீரமைப்பது போல் பீகாரில் வெற்றியைப் பறிக்க பாஜக முயற்சி : ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
மகாராஷ்டிர மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைத்து வெற்றியை பறித்தது போல, பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றியை பறிக்க முயற்சிப்பதாக மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி புகார் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் சாய்கவுனில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி தலைமையில் பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சக்தி வாய்ந்ததாக இருந்ததாகவும், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவரை தம் பக்கம் இழுத்து பா.ஜ.க. முதலமைச்சர் ஆக்கியதாகவும் புகார் கூறினார்.
முன்னதாக பேசிய ராகுல்காந்தி, மகாராஷ்டிர மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைத்து வெற்றியை பறித்தது போல், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றியை பறிக்க முயற்சிப்பதாக விமர்சித்தார்.இதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் துணை போவதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்.
இந்திய தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.விற்கும், அந்தத் தலைவர்களுக்கும் தனது கடமையை இந்திய தேர்தல் ஆணையம் மறந்து விட்டது. முறை வாக்காளர் பட்டியலையும் வாக்களிக்கும் வீடியோக்களையும் தருமாறு கேட்டேன். ஆனால் எனது வேண்டுகோளுக்கு தேர்தல் ஆணையம் செவி சாய்க்கவில்லை எனவும ராகுல்காந்தி குற்றம்சாட்டி யுள்ளார்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!