India
ராஜஸ்தானில் 4,500 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பா ? சரஸ்வதி நாகரிகம் என பரவும் வதந்தி... உண்மை என்ன ?
சமீபத்தில் ராஜஸ்தானில் 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது சரஸ்வதி நதியுடன் தொடர்புடையது என்றும் தகவல் சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பரவியது. சில ஒன்றிய ஒன்றிய தொல்லியல் துறை அதிகாரிகள் கூட இது சரஸ்வதி நதியுடன் தொடர்புடையது என்று கருத்து தெரிவித்தனர். அதன் உண்மை தன்மை அறியாமல் ஏராளமான ஊடங்களும் அது குறித்து செய்தி வெளியிட்டன.
இது வரை ராஜஸ்தானில் கிடைத்த பொருள்கள் சிந்துசமவெளி நாகரீகத்துக்கு பிந்தையது என்றும், அதிகபட்சம் மௌரிய ஆட்சி காலத்தை சேர்ந்தது என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அதன் காலம் அதிகபட்சம் 2,000 ஆண்டுகள் பழமையானது. ஆனால் எந்த தரவும் இல்லாமல் ஒன்றிய தொல்லியல் துறை அதிகாரிகள் ஏன் 4,500 ஆண்டுகள் என்று சொல்லவேண்டும். அதில் தான் மிகப்பெரும் அரசியலே அடங்கியுள்ளது.
சிந்து சமவெளி கண்டுபிடிப்புகள் வெளிவரும் வரை வேத கால நாகரீகமே இந்தியாவின் தொடக்கம் என்றும், வேதங்களில் கூறப்பட்டுள்ள சரஸ்வதி நதியில் இருந்தே இந்தியாவின் வரலாறு தொடங்கியது என்றும் சம்ஸ்கிருத ஆய்வாளர்கள் கூறி வந்தனர். ஆனால் சிந்து சமவெளி நாகரீகம் குறித்த ஆய்வு வெளிவந்து, அதில் வேத காலத்தின் எந்த கூறுகளும் காணப்படவில்லை என்பது நிரூபணமானது. எனினும் அதனை ஒப்புக்கொள்ளாத வடஇந்திய ஆய்வாளர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தை , சிந்து சரஸ்வதி நாகரீகம் என்று அழைத்ததோடு இல்லாத சரஸ்வதி நதியை கண்டுபிடிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
இதனிடையே மதுரை அருகேயுள்ள கீழடியில் 3000 ஆண்டுகள் தொன்மையான நகர நாகரீகம் கண்டறியப்பட்டது. இங்கு கண்டறியப்பட்ட பொருள்கள் சிந்து சமவெளியில் கிடைத்த பொருள்களுடன் ஒப்பிடப்பட்டு, சிந்து சமவெளி நாகரீகத்தின் தொடர்ச்சியே கீழடி நாகரீகம் என்று நிரூபணமானது. ஏற்கனவே பல்வேறு ஆய்வாளர்கள் சிந்து சமவெளி நாகரீக பகுதியில் வாழ்ந்த மக்கள் தொல் திராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் இருக்கும் ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்தவர்கள் என்று கூறி வரும் நிலையில், கீழடியில் கிடைத்த தொன்மையான பொருள்கள் ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து இந்தியாவுக்குள் வந்தவர்கள் எந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்தது.
இதன் காரணமாகவே கீழடியின் தொன்மை வெளியே வராமல் அது குறித்து ஆய்வு செய்த ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை பணியிட மாற்றம் செய்து, கீழடியில் ஆய்வு செய்ய எதுவும் இல்லை என்று அந்த ஆய்வையே ஒன்றிய பாஜக அரசு நிறுத்தியது. எனினும் அங்கு தமிழ்நாடு அரசின் முயற்ச்சியால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் கண்டுபிடித்த பொருள்களின் மூலம் கீழடியின் காலகட்டம் 2500-ல் இருந்து 3000 ஆண்டு பழமையானது என்பது உறுதியாகியுள்ளது.
எனினும் அதனை ஒன்றிய அரசு ஏற்காத நிலையில், தற்போது ராஜஸ்தானில் கிடைத்த பொருள்கள் 4500 ஆண்டுகள் பழமையானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாதபோதும், ஒன்றிய தொல்லியல் துறை அதிகாரிகளே அதை 4500 ஆண்டுகள் பழமையானது என்று கூறி வருகின்றனர். இதன் மூலம் ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்தவர்கள் அல்ல என்று நிறுவுவதே இவர்களின் நோக்கமாக அமைந்துள்ளது.
ராஜஸ்தானின் டீக் மாவட்டத்தில் பஹாஜ் கிராமத்திற்கு அருகில் ஒன்றிய தொல்லியல் துறையினர் கடந்த ஜனவரி மாதம் இந்த அகழாய்வை தொடங்கினர். அதில் கிடைத்த பொருள்கள் சிந்து சமவெளிக்கு பிந்தைய காலத்தை சேர்ந்ததாகவே உள்ளது. அதிலும் நவீன இந்திய அரசுகளாக மௌரிய, குஷான், மகதம் மற்றும் சுங்க அரசுகள் ஆண்ட காலத்தை சேர்ந்தவையாகவே உள்ளது. ஆனால் கீழடி நாகரீகம் இதற்கும் 500 ஆண்டுகளுக்கும் முந்தையது ஆகும். இதன் மூலம்ராஜஸ்தானில் கிடைத்த பொருள்கள் 4500 ஆண்டுகள் பழமையானது அல்ல என்பதும் அதிகபட்சம் 2000 ஆண்டுகள் பழமையானது என்பதும் தெரியவந்துள்ளது.
Also Read
-
“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !
-
“ஓரணியில் தமிழ்நாடு” - வீடு வீடாகச் சென்று முதலமைச்சர் பரப்புரை - மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய பொதுமக்கள்!
-
“தடித்த தோலுக்கு ‘மன்னிப்பின்’ மகத்துவம் தெரியுமா?” - பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி கட்டுரை!
-
“இதுதான் உண்மையான சமநீதி - சமூகநீதி” : ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் குறித்து முரசொலி தலையங்கத்தில் புகழாரம்!
-
"இளைஞர் அஜித்குமார் விவகாரத்தில் சாத்தான் வேதம் ஓதும் பழனிசாமி" : ஆர்.எஸ். பாரதி பதிலடி!