India
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகை திடீர் மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி!
மும்பையை சேர்ந்தவர் ஷெஃபாலி ஜரிவாலா. இவர் 2000 ஆம் ஆண்டு ’காந்தா லகா’ ரீமிக்ஸ் பாடல் மூலம் பிரபலமானர். ஸ்வீட் ஹனி மிக்ஸ் மற்றும் கபி ஆர் கபி பார் ரீமிக்ஸ் போன்ற பாடல்களிலும் ஷெஃபாலி பங்கேற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு சல்மான் கான், அக்ஷய் குமார் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த ’முஜ்சே ஷாதி கரோகி’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
பின்னர் 2011 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ’ஹுடகுரு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஷெஃபாலி ஜரிவாலா தனது கணவர் பராக் தியாகியுடன் நாச் பாலியே 5 மற்றும் நாச் பாலியே 7 படங்களிலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் 13 சிசனில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் மும்பையில் உள்ள வீட்டில் இருக்கும் போது ஷெஃபாலி ஜரிவாலாவுக்கு உடல்நிலை பாதித்துள்ளது. உடனே அவரது கணவர் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Also Read
-
தமிழ்நாட்டில் பள்ளிவாசல்களை அகற்றுவதா? : த.வெ.க அரசின் நடவடிக்கைக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
Data கசிவு.. 15 பேர் சஸ்பெண்ட்.. ஆந்திராவுடன் சேர்ந்த 3 பணியாளர்கள்.. Guidance TN-ல் ஆந்திர Sleeper Cell?
-
வி.எஸ்.பாபு காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
அமைச்சர் வன்னி அரசு மீது கர்நாடக அரசு வழக்குப் பதிவு? அம்மாநில வனத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
-
ஒரு சதவீதம்கூட உண்மையில்லை ; ஜூனியர் விகடன் மன்னிப்பு கேட்க வேண்டும் : எ.வ.வேலு பேட்டி!