India
தமிழ்நாட்டில் தொடர் கனமழைக்கு வாய்ப்பு: கர்நாடகாவில் சிவப்பு நிற எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மேற்குத்தொடர்ச்சி மழை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதோடு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது .
இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், கர்நாடக மாநிலத்தின் சில இடங்களில் இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
கேரளா மற்றும் மாஹே, லட்சத்தீவு, கர்நாடகா ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அப்போது மணிக்கு 30-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் ஓரளவு பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர ஆந்திரா மற்றும் ஏனாம், ராயலசீமா, தெலுங்கானா ஆகிய இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அப்போது மணிக்கு 30-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா & மாஹே, கர்நாடகா ஆகிய இடங்களில் இன்று முதல் 25 ஆம் தேதிகளிலும், ராயலசீமா, இன்றும் நளையும், கடலோர ஆந்திரா & ஏனாம், தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!