India
உத்தரபிரதேசமாக மாறும் டெல்லி : மீன் மற்றும் இறைச்சி கடைகளை மூடும் பா.ஜ.க கும்பல்!
ஒன்றியத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ. ஆட்சி அமைந்ததில் இருந்தே சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் அதிகரித்துவிட்டது. அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களை ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட சொல்லி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வீடியோக்களும் இணையத்தில் அவ்வப்போது வைரலாகி வருகிறது.
மேலும் சிறுபான்மை மக்கள் நடத்தி வரும் இறைச்சி கடைகளை சூறையாடி அவர்களை பொருளாதார ரீதியாகவும் இந்துத்துவா கும்பல் முடக்கப்பார்கிறது. மேலும் மக்களின் உணவு பழக்கங்களிலும் பா.ஜ.க தலையிடுகிறது.
இந்த கொடூரங்கள் எல்லாம் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் அதிகம் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததை அடுத்து இங்கும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடக்கும் சம்பவம் அதிகமாகிவிட்டது. சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதியில் திட்டமிட்ட வன்முறை சம்பவங்களை இந்துத்துவ கும்பல் அரங்கேற்றி வருகிறது.
டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சி.ஆர்.பார்க் பகுதியில், கோவில் அருகே பல ஆண்டுகளாக மீன் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது.ஆனால் தற்போது திடீரென்று பா.ஜ.க குண்டர்கள் மீன் மற்றும் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என அடாவடித்தனத்துடன் நடந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்,மஹுவா மொய்த்ரா, ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், இது குறித்து டெல்லி போலிஸார் விசாரணை நடத்தாமல் அலட்சியத்துடன் இருந்து வருகிறார்கள்.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!