India
உ.பி-யில் 6 மாதங்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை... பாஜக அரசின் உத்தரவுக்கு குவியும் கண்டனம் - பின்னணி?
பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலும் மக்களுக்கு விரோதமாக சட்டங்கள் இருக்கிறது. குறிப்பாக உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பாஜக அரசின் கொடுமைகளுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையிலிலும், பாஜக அதனை பொருட்படுத்தாமல் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது உத்தர பிரதேசத்தில் அடுத்து வரும் 6 மாதங்களுக்கு அரசு ஊழியர்கள் போராட்டங்கள் நடத்த தடை விதித்துள்ளது உ.பி. பாஜக அரசு. உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த சூழலில் அரசு ஊழியர்களுக்கு போராட்டம் நடத்த பாஜக அரசு தடை விதித்துள்ளது.
அதாவது மகா கும்பமேளா திருவிழா ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் இந்த விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்த விழா இந்த முறை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு அம்மாநில அரசு பலகட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு துறை ஊழியர்கள், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், மக்கள் என அனைவரும் அடுத்து வரும் 6 மாதங்களுக்கு வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்கள் நடத்த தடை விதித்து உ.பி. பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு தற்போது பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து உ.பி. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி, “மக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தங்கள் கருத்துகளை தெரிவிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி உரிமை உள்ளது. ஆனால் மக்கள் அவ்வாறு செய்வதை அரசாங்கம் விரும்பவில்லை என்று தெரிகிறது. இது ஜனநாயக விரோதமான செயல்" என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு முறையும் நடைபெறும் மகா கும்பமேளா திருவிழாவில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்த திருவிழாவில் சிலர் காணாமல் போவர், அதே போல் ஒவ்வொரு முறையும் கூட்ட நெரிசலில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி நீக்கம் மசோதாவுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!