India
சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்! : எந்தெந்த நாட்களில் நடைபெறுகிறது?
சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் சி.பி.எஸ்.இ பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நாட்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்வை பொறுத்தமட்டில் 2025 பிப்ரவரி 15ஆம் நாள் ஆங்கிலம், பிப்ரவரி 20ஆம் நாள் அறிவியல் தேர்வுகள் நடக்கிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகளும், மார்ச் 10ம் நாள் கணிதம், மார்ச் 13ம் நாள் ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு தேர்வை பொறுத்தமட்டில் பிப்ரவரி 15ஆம் நாள் தொழிற்கல்வி பாட (entrepreneurship exam) தேர்வு நடைபெற உள்ளது. பிப்ரவரி 21ஆம் நாள் இயற்பியல், 24ஆம் நாள் புவியியல், 27ல் வேதியியல் தேர்வுகள் நடக்க உள்ளது. பொதுத்தேர்வு குறித்த கூடுதல் விபரங்களை, மாணவ-மாணவிகள் www.cbse.gov.in இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என ஒன்றிய கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை நாடு முழுவதும் மொத்தமாக சுமார் 44 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதில் பெரும்பான்மையான தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடக்கும் என்றும், சில தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு என்பது 2025 பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கி மார்ச் 18 வரை நடைபெற உள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!