India
”உண்மைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்” : ஹரியானா தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தியின் கருத்து என்ன?
90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா கூட்டணியில், தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், சி.பி.எம் ஒரு தொகுதியிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
அதேபோல் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி 81 தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ஜ.க யாருடனும் கூட்டணி வைக்காமல் 62 தொகுதிகளில் மட்டுமே தனித்து போட்டியிட்டது.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் இந்தியா கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜ.க படுதோல்வி அடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜனநாயக சுயமரியாதையின் வெற்றி என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றி. இது இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கும், ஜனநாயக சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி ஆகும். சமூக மற்றும் பொருளாதார நீதிக்காகவும், அடிப்படை உரிமைக்காகவும் எங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஹரியானா தேர்தல் முடிவு குறித்து, ஹரியானா மக்களின் ஆதரவுக்கு நன்றி, இந்த தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் கவனித்து ஆய்வு செய்து வருகிறது. பல தொகுதிகளில் இருந்து வந்த புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம். நீதிக்காவும், உண்மைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போம் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘இண்டிகோ’ விமானங்கள் ரத்து செய்வதற்கு காரணம் என்ன? : உண்மையை எடுத்துச் சொல்லும் முரசொலி தலையங்கம்!
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!