India
”பா.ஜ.கவின் நச்சு மனப்பான்மைக்கு பயப்பட மாட்டோம்” : மல்லிகார்ஜூன கார்கே பதிலடி!
இந்தியா கூட்டணியால் தங்களது ஆசை நிராசையானதை அடுத்து பா.ஜ.க தலைவர்கள் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை குறிவைத்து தாக்கி வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தியை ’பப்பு’ என கேலி பேசினார்கள்.
ஆனால், ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தைக் கண்டு பா.ஜ.க அஞ்சியது. ’பப்பு’ என்று கேலி செய்யப்பட்ட ராகுல் காந்திதான் இன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பா.ஜ.கவிற்கு சவால்விட்டு வருகிறார். நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள்திணறிவருகிறார்கள்.
மேலும் மக்கள் மத்தியில் ராகுல் காந்தியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத பா.ஜ.க தலைவர்கள் ராகுல் காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியலை அப்பட்டமாக முன்கெடுத்து வருகிறார்கள். தற்போது அவருக்கு ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் பிட்டு கொலை மிரட்டலே விடுத்துள்ளார்.
ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, "நாட்டின் நம்பவர் ஒன் பயங்கரவாதி ராகுல்காந்தி" என வெறுப்புணர்வை தூண்டியுள்ளார். அதேபோல் பா.ஜ.க தலைவர் தர்விந்தர் சிங் மர்வா, இந்திரா காந்திக்கு நேர்ந்த கதியே உங்களுக்கும் ஏற்படும் என ராகுல் காந்திக்கு அப்பட்டமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க நிர்வாகிகள் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில், பா.ஜ.கவின் நச்சு மனப்பான்மைக்கு பயப்பட மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "உண்மை பேசும் ராகுல்காந்திக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் எப்போதும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஒருவர் நாக்கை அறுப்பதாக கூறுகிறார், இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படும் என அச்சுறுத்துகின்றனர்.
பா.ஜ.கவின் நச்சு மனப்பான்மைக்கு பயப்பட மாட்டோம். ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி வரும் பாஜக எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் மீது பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!
-
அதானியை காப்பாற்ற 35 ஆயிரம் கோடி LIC நிதியை வழங்கிய ஒன்றிய பாஜக அரசு... அம்பலப்படுத்திய பிரபல நாளிதழ் !
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!