India
12ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி - நீட் தேர்வில் 705 மதிப்பெண்! : தேசிய தேர்வுகளில் தொடரும் மோசடிகள்!
பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சில மாணவர்கள், தேர்வெழுதுவதற்காக சுமார் 1,000 கிலோ மீட்டர் பயணம் செய்த நிலையில், அவர்கள் பெற்ற மதிப்பெண் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
குஜராத்திலிருந்து கர்நாடக மாநிலத்தின் பெல்காம் தேர்வு மையம் சென்று நீட் தேர்வி எழுதிய மாணவி ஒருவர், 12ஆம் வகுப்பில் 2 முறை தோல்வியடைந்தவராக இருந்த நிலையிலும், நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்றுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவர், கடந்த ஆண்டு நீட் தேர்வில் 209 மதிப்பெண்களே பெற்றிருந்த நிலையில், அண்மையில் நடந்துமுடிந்த நீட் தேர்வில் 710 மதிப்பெண்களைப் பெற்று, தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளார்.
இந்நிலையில், குஜராத் மாணவர்கள் 1,000 கிலோ மீட்டர் தாண்டி கர்நாடகாவில் ஏன் தேர்வு எழுதினார்கள்? என்பதை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஏற்கனவே மருத்துவ சேர்க்கை பெற்றுத் தருவதாக கூறி 10 மாணவர்களிடம் மோசடி செய்த நபரை கடந்த ஜூலை மாதம் பெல்காம் காவல்துறை கைது செய்தது. அவரிடமிருந்து 1.30 கோடி ரூபாய் அப்போது கைப்பற்றப்பட்டது.
ஆகையால், குஜராத் மாநிலம் கோத்ரா மையத்தில் நடைபெற்ற மோசடி குறித்து சி.பி.ஐ விசாரித்து வரும் நிலையில், பெல்காம் மையத்தின் மீதும் தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளன.
Also Read
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
-
இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?
-
"GST வரி விதிப்பு மாற்றத்தால் லாபம் அடையப்போவது பெரு நிறுவனங்கள்தான்" - கேரள அமைச்சர் விமர்சனம் !