India
9 மாதங்களாக கச்சா எண்ணெய் விலை சரிவு : பெட்ரோல் விலையை குறைக்காமல் மக்களை வஞ்சிக்கும் மோடி அரசு!
ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தே வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.60க்கு கீழ் இழந்தது. ஆனால் பா.ஜ.க வந்த பிறகு பெட்ரோல் விலை ரூ.100 கடந்தது.
கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் விண்ணை தொடும் அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எல்லாம் பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது.
பின்னர் நாடாளுமன்ற தேர்தலுக்காக பெட்ரோல் விலை ரூ.2 ஒன்றிய அரசு குறைத்தது. பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமரா பதவியேற்ற பிறகு கூட பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை.
இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக விலை குறைந்து வந்தாலும் ஒன்றிய பா.ஜ.க அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் பொதுமக்களை வஞ்சித்து வருகிறது என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயரும் போது எல்லாம் பா.ஜ.கவினர் சொல்வது ஒன்றுதான். கச்சா எண்ணெய் விலை உயர்வதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியவில்லை என்று கூறுவார்கள். இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை ஏன் எங்கள் மோடி குறைக்காமல் இருக்கிறார் என்று சமூக ஆர்வளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!