India
”வெட்கக்கேடான பேச்சு” : கங்கனா ரனாவத்துக்கு ராகுல் காந்தி கண்டனம்!
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை கொண்டுவரப் பார்த்தது. இதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். குறிப்பாக டெல்லி எல்லையில் ஒரு வருடத்திற்கு வலுவான போராட்டத்தை நடத்தினர்.
இந்த போராட்டத்தை எப்படியாவது ஒன்றிய அரசு சிதைக்கப்பார்த்தது. இருந்தும் துணிச்சலுடன் விவசாயிகள் போராடினர். பின்னர் வேறு வழி இல்லாமல் ஒன்றிய அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றது. இதைத்தொடர்ந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக (MSP) விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தையும் பாஜக கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
இதனிடையே தொடர்ச்சியாகவே விவசாயிகள் போராட்டத்தை கங்கனா ரனாவத் கொச்சைப்படுத்தி வருகிறார். விவசாயிகளை திவிரவாதிகள் என்று கூறினார். தற்போது பா.ஜ.க எம்.பியாக இருக்கும் கங்கனா,”வேளாண் சட்டங்கள் போராட்டத்தின்போது தூக்கிலிடுதலும், பாலியல் வன்கொடுமைகளும் நடந்தன. அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகும் போராட்டங்கள் தொடர்ந்ததற்கு அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாட்டு சதிகள்தான் காரணம். இந்த நாடு நாய்களின் கைகளுக்கு சென்றாலும் கவலையில்லை என்றே இருக்கிறார்கள்." வெட்கக்கேடனா வார்த்தைகளை பயன்படுத்தி பேசி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத் பேச்சுக்கு எடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ”விவசாயிகளுக்கு எதிரான வெட்கக்கேடான வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. பா.ஜ.கவின் விவசாய விரோத கொள்கைக்குக்கும் நோக்கத்திற்கும் இது மற்றொரு சான்று. நரேந்திர மோடியும் பா.ஜ.கவும் எவ்வளவு சதி செய்தாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இந்தியா கூட்டணி பெற்றுத்தரும்.” என சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!