India
இட ஒதுக்கீட்டை பறிக்கும் பா.ஜ.கவின் சதி திட்டம் முறியடிப்பு : மல்லிகார்ஜூன கார்கே!
ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள், 35 இயக்குநர்கள், துணைச்செயலாளர்கள் என 45 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவிப்பாணை வெளியிட்டது.
இதில் தனியார் துறையை சேர்ந்தவர்களும் நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாது என்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பிய நிலையில் Lateral Entry என்ற அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற்றுள்ளது.
இந்நிலையில், இட ஒதுக்கீட்டை பறிக்கும் பா.ஜ.கவின் திட்டம் சமூக நீதிக்கான போராட்டத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”இட ஒதுக்கீட்டை பறிக்கும் பா.ஜ.கவின் திட்டம் சமூக நீதிக்கான போராட்டத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் அதிகாரத்தால் மட்டுமே சர்வாதிகார ஆணவத்தை முறியடிக்க முடியும். பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் இருக்கும் வரை இடஒதுக்கீட்டைப் பறிக்க புதிய யுக்திகளைக் கையாளும். நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!