India
பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை - மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் எங்கே? : சுப்ரியா சுலே MP கேள்வி!
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திற்குட்பட்ட பட்லாப்பூரில் தனியார் பள்ளி ஒன்றில் 4 வயது சிறுமியை கழிவறையில், பள்ளியின் காவலாளி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்த சம்பவம் பூதாகரமானதை அடுத்து குற்றவாளியை போலிஸார் கைது செய்தனர். ஆனால் போக்சோ வழக்கு பதிவு செய்யவில்லை. இதற்கு எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து போக்சோ வழக்கு பதிவு செய்ய காவல் ஆய்வாளர் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்லாப்பூர் பகுதியில் இருக்க கூடிய ரயில் நிலையத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பெண்களுக்கு எப்போதுதான் நீதி கிடைக்கும்? என பிரியங்கா சதுர்வேதி MP கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”ஒவ்வொரு முறையும் பெண்களின் உரிமைக்காக போராடுவோம். நீதி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தேர்தல் முடிந்துவிட்டால் யாரும் அதை கண்டு கொள்வதில்லை. பெண்களுக்கு எப்போதுதான் நீதி கிடைக்கும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் சுப்ரியா சுலே MP, ”மகாராஷ்டிரா அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது. மாநிலத்தில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்துறை அமைச்சராக இருந்த போதெல்லாம், மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தோல்வியடைந்துள்ளது” என கண்டித்துள்ளார்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!