India
அயோத்தி ராமர் கோயிலில் 4000 மின் விளக்குகள் திருட்டு : போலிஸ் விசாரணை!
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் தங்களின் மத அரசியலுக்காக பா.ஜ.க ராமர் கோயிலை கட்டியுள்ளது. மேலும் முழுமையாக இக்கோயில் கட்டி முடிக்கப்படாமலே அவசர அவசரமாக நாடாளுமன்ற தேர்தல் லாபத்திற்காக திறக்கப்பட்டது.
அண்மையில் பெய்த மழையின்போது கூட ராமர் கோயிலில் மழைநீர் கொட்டியது. மேலும் இக்கோயில் நிர்வாகத்தின் மீது பல புகார்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், கோயிலின் முகப்பில் அலங்காரங்களுக்காக வைக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமர் கோயிலுக்கு செல்லும் வழிமுழுவதும் ஆயிரக்கணக்கான வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் 19 ஆம் தேதி வரை அனைத்து விளக்குகளும் இருந்துள்ளது. பின்னர் மே 9 ஆம் தேதிக்கு பிறகு ஆய்வு செய்தபோது சில விளக்குகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.இதுவரை 3800 மூங்கில் மின் விளக்குகளும், 36 LED விளக்குகளும் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!