India
ஜம்மு - காஷ்மீர் சிறப்பு நிலை நீக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு : 5 ஆண்டுகளில் உச்சம் தொட்ட தாக்குதல்கள்!
பா.ஜ.க அரசு, தனது பல நாள் நோக்கமான, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு நிலை நீக்க நடவடிக்கையை, 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த போது நிறைவேற்றியது.
அப்போதே, ஜம்மு - காஷ்மீரின் மாநில அரசு அதிகாரமும் நீக்கப்பட்டு, ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
அரசியல் தலைவர்கள் பலர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தீவிரவாத தாக்குதல்களும், தேசிய பாதுகாப்பில் அலட்சியமும் தலைதூக்கியது.
அவ்வகையில், கடந்த 32 மாதங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், தங்களின் உயிர்களை துறக்கும் நிலையும் ஏற்பட்டது. இது போன்ற பல்வேறு கலவர நிகழ்வுகளுக்கு இடையில், இன்று (05.08.24) நிறைவு செய்தது, ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு நிலை நீக்கம்.
இந்நிலையில், சிறப்பு நிலை நீக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவுற்ற நாளான இன்று, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “2019ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு தகுதி நீக்கப்பட்டதற்கு பிறகு, அப்பகுதியில் சுமார் 683 தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. எனவே, ஜம்மு - காஷ்மீரில் உடனடியாக தேர்தலை நடத்தி அதிகாரிகளின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்” என்றார்.
எனினும், தேர்தல் குறித்த விரிவான விளக்கத்தை வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!