India
குச்சிகளால் தாக்கப்பட்ட இளைஞர்... வயிறு கிழிந்து வெளியே வந்த குடல்... இரயில்வே அதிகாரி வெறிச்செயல் !
பாஜக கூட்டணி ஆளும் பீகாரில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் முகமது ஃபர்கான் (25) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்த சூழலில் சம்பவத்தன்று, இளைஞர் தனது உறவினர் ஒருவரை மும்பைக்கு செல்லும் கர்மபூமி எக்ஸ்பிரஸ் இரயிலில், இரயில் ஏற்றி விட சென்றுள்ளார். அங்கே அவரை ஏற்றிவிட்ட பின்னர், அவருக்கும், அங்கிருந்த இரயில்வே ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த இரயில்வே போலீஸ் , அந்த இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் தனது கையில் இருந்த குச்சியை கொண்டு கடுமையாக தாக்கியதில் இளைஞருக்கு கடும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனது வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ததால் தன்னை விட்டுவிடுமாறு இளைஞர் கெஞ்சியபோதிலும், அந்த போலீஸ் வேண்டுமென்றே வயிற்றில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த கொடூர தாக்குதலில் இளைஞரின் வயிறு கிழிந்து, உள்ளிருந்த குடல் வெளியே வந்தது. இருப்பினும் அவர் அடிப்பதை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள், அந்த இளைஞரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக முசாஃபுர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அந்த இளைஞருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்புதான் வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அந்த இரயில்வே போலீஸ் இரக்கமின்றி அந்த இளைஞரின் வயிற்றில் கடுமையாக தாக்கி குடல் வெளியே வந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. அந்த இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரயில்வே போலீஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இளைஞரின் குடல் வெளியே வந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!