India
உயிருடன் புதைக்கப்பட்ட 2 பெண்கள் : பா.ஜ.க ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் கொடூரம்!
மத்திய பிரதேச மாநிலம் ஹினோடா ஜோரோட் கிராமத்தை சேர்ந்தவர்கள் மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே. இவர்கள் குத்தகைத்து நிலம் எடுத்துள்ளனர். இந்த நிலத்தில் சிலர் சாலை அமைக்க முற்பட்டுள்ளனர்.
இதற்கு இவர்கள் இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது, அவர்கள் மீது லாரியில் இருந்த மணலை கொட்டி உயிருடன் புதைத்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த சிலர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
”பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசத்தில் இதுதான் நிலைமை. பெண்களின் பாதுகாப்பு குறித்து பா.ஜ.க பேச வெட்கப்பட வேண்டும்” என சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!