India
”சர்வாதிகாரத்தை ஒழிக்க விரும்பும் மக்கள்” : 7 மாநில இடைத்தேர்தல் முடிவுகளை சுட்டிகாட்டும் ராகுல் காந்தி!
தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து இன்று 13 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.
மேற்குவங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்று பெற்றுள்ளனர். இவர்களை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர். மேலும் பா.ஜ.கவிடம் இருந்த மூன்று தொகுதிகளை திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஹமிர்பூர் தொகுதியில் மட்டும் பா.ஜ.க வெற்றி பெற்றது.
உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.அதேபோல் பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.
பீகாரில் ரூபாலி இடைத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி அடைந்துள்ளது. இங்கு சங்கர் சிங் என்ற சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ்நாட்டில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் 1,24,053 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார். 13 இடைத்தேர்தலில் பா.ஜ.க 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், சர்வாதிகாரத்தை ஒழிக்க மக்கள் விரும்புவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளிகள், தொழிலதிபர்கள், வேலை தேடுபவர்கள் என ஒவ்வொரு வர்க்கமும் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலை நாட்ட விரும்புகிறார்கள்.மக்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அரசியலமைப்பின் பாதுகாப்பிற்காகவும் இந்தியாவுடன் முழுமையாக நிற்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!