India
மூளையை உண்ணும் அமீபா... குளத்தில் குளித்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம் : கேரளாவில் பரபரப்பு !
கேரளாவின் இருமூளிபரம்பு பகுதியைச் சேர்ந்த மிருதுல் கோழிக்கோடு பரூக் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த வாரம் வாந்தி மற்றும் தலைவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், சிறுவன் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸின் என்ற அமீபாவால் பாதிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இந்த மரணத்துக்கு காரணம் மூக்கு வலியாக மூளைக்கு சென்று அதனை சேதப்படுத்தும் அமீபாவே காரணம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், கேரளாவில் மட்டும் இந்த அமீபா காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற சூடான நன்னீர் நீரில் வாழும் இந்த வகை அமீபாக்கள் மனிதருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. ஏரி, குளங்களில் குளிக்கும்போது இந்த அமீபா நம் மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும்.
பின் மூளையை அடைந்து அதன் செல்களை கொஞ்சம் கொஞ்சமாக உண்ணத் தொடங்கும். இதன் காரணமாக உயிரிழப்புகள் கூட ஏற்படும். என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் 154 நோயாளிகள் இந்த அமீபா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்றும், இது மனிதர்களிடமிருந்து பிறர்க்கு பரவாது என்றும் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!