India
மீண்டும் மீண்டும் அரசியல் சாசனத்தை குறிவைக்கும் பாஜக - ராஜஸ்தான் துணை முதல்வர் பேச்சால் சர்ச்சை !
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (07.05.2024) 3-ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளுக்கு நடைபெற்றது. வட மாநிலங்களில் நடைபெறும் ஒவ்வொரு வாக்குப்பதிவின்போதும், பாஜக எதையாவது கலவரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக மேற்கொள்ளும் பிரசாரத்தில் சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறது.
குறிப்பாக இஸ்லாமியர்கள், இடஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டம் உள்ளிட்டவற்றை சர்ச்சை கருத்துகளை பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். பாஜக இந்த முறையும் வெற்றி பெற்றால், நாடு மீண்டும் அடிமைப்பட்டு விடும் என்றும், ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் சுதந்திரம் பறிபோய் விடும் என்றும், அரசியல் சாசனமே இல்லாமல் போய்விடும் என்றும் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதனை உண்மை என நிரூபிக்கும் வகையில், பாஜக நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
ஏற்கனவே பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் அயோத்தி மக்களவைத் தொகுதி பாஜக எம்.பியும், தற்போதுள்ள வேட்பாளருமான லல்லு சிங், "நாம் (பாஜக) ஆட்சியை கைப்பற்ற 272 தொகுதிகள் இருந்தால் போதும். ஆனால் அரசியல் சாசனத்தை முழுமையாக மாற்ற வேண்டும் என்றால் பாஜக 400 இடங்களை கைப்பற்ற வேண்டும்" என்று பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்களை எழுப்பியது.
அதற்கும் முன்னதாக ராஜஸ்தானின் நாகவுர் பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தாவும், கர்நாடக மாநில பாஜக எம்.பி அனந்த குமாரும், இதே போல் பேசி சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது மேலும் ஒரு பாஜக வேட்பாளர் பேசியுள்ளது கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், ராஜஸ்தானின் துணை முதல்வரும் இதுபோல் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆளும் ராஜஸ்தானின் துணை முதல்வராக இருக்கும் தியா குமாரி, "இடஒதுக்கீடு முறைக்கு அரசியலமைப்புதான் காரணம். எனவே அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக மாற்ற வேண்டும்" என்று பேசியுள்ளது பலர் மத்தியிலும் விமர்சனங்களையும், கண்டனங்களையும் எழுப்பி வருகிறது. தொடர்ந்து பாஜகவினர் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பேசி வருவதன் மூலம் பாஜகவின் அடுத்த குறி, அரசியல் சாசனத்தை மாற்றுவது என்பது தெளிவாக தெரிகிறது.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!