India
”முதல்கட்ட வாக்குப்பதிவிலேயே பா.ஜ.கவின் படம் 𝐅𝐥𝐨𝐩” : தேஜஸ்வி பேட்டி!
18 ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று 21 மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு (39), புதுச்சேரி (1)அருணாச்சல பிரதேசம் ( 2 தொகுதி), அசாம் (5 தொகுதி), பீகார் (5 தொகுதி ), சத்தீஸ்கர் (1 தொகுதி ), மத்திய பிரதேசம் (6 தொகுதி ), மகாராஷ்டிரா (5 தொகுதி ), மணிப்பூர் (2 தொகுதி ), மேகலயா (2 தொகுதி ), மிசோரம் (1 தொகுதி ), நாகாலாந்து (1 தொகுதி ), ராஜஸ்தான் (12 தொகுதி ), சிக்கிம் (1 தொகுதி ), திரிபுரா (1 தொகுதி ), உத்தர பிரதேசம் (8 தொகுதி ), உத்தரகாண்ட் (5 தொகுதி ), மேற்குவங்கம் (3 தொகுதி ), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1 தொகுதி ), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1 தொகுதி ), லட்சத்தீவு (1 தொகுதி ) ஆகிய மாநிலங்களில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 64% வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று காலை 7 மணியிலிருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் 69 % வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் பீகாரில் முதல்கட்டமாக 5 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 47.49% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் முதல்கட்ட வாக்குப்பதிவிலேயே பா.ஜ.கவின் படம் தோல்வியடைந்து விட்டதாகப் பீகார் முன்னாள் முதல்வர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி கொடுத்துள்ள தேஜஸ்வி, "400 இடங்கள் என்ற பா.ஜ.கவின் படம் முதல்கட்ட வாக்குப்பதிவின் போதே தோல்வி அடைந்துவிட்டது. இவர்களது மலையளவு பொய்களும், அறிக்கைகளும் சரிந்து விட்டது.பா.ஜ.கவின் நாட்கள் இப்போது முடிந்துவிட்டன. "என தெரிவித்துள்ளார்.
அதேபோல் தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் "இந்தியாவுக்கு வெற்றிதான்" என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சுயேச்சை வேட்பாளரை விலைக்கு வாங்கிய த.வெ.க : கிழிந்து தொங்கும் தூய சக்தியின் முத்திரை!
-
ஆ.. தள்ளு.. தள்ளு.. தள்ளு : நடுரோட்டில் பழுதாகி நிற்கும் வெற்றிப் பயணம் பேருந்துகள் - TVK லட்சணம்!
-
த.வெ.க. அடிமை மாணிக்கம் தாகூர் வாயை அடக்க வேண்டும்.. இல்லையென்றால் அடக்கப்படும்! : திமுக கண்டனம்!
-
Attendance போடுவதற்கு முன் வரலாறு தெரிந்து பேசவும்: மாணிக்கம் தாகூருக்கு கனிமொழி என்.வி.என்.சோமு பதிலடி!
-
“கைது செய்தே காலத்தை ஓட்டிவிடலாம் என்கிற மிதப்பில் இருக்கிறாரா முதலமைச்சர்?” : கனிமொழி எம்.பி கேள்வி!