India
”பா.ஜ.க தேர்தல் அறிக்கை செல்லா காசோலை” : தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சனம்!
இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மக்களவை தேர்தல் 7 கட்டுமாக நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் கூட காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதேபோல் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தி.மு.கவும் தனது தேர்தல் அறிக்கை வெளியிட்டது. ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க இன்று தனது தேர்தல் அறிக்கையை வளர்ந்த இந்தியா என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட, ”எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்?” என விமர்சித்துள்ளார். அதேபோல், சிவ சேனா (உத்தவ் பிரிவு) எம்.பி பிரியன்கா சதுர்வேதி :"1 மணி நேரம் 40 நிமிடம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களிடம் எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை. வெறும் 13 நாட்களிலேயே பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாராகிவிட்டது. இது பாஜகவின் ‘தேர்தல் அறிக்கை’ அல்ல, ‘ஜூம்லா அறிக்கை'" என்று விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் தெலங்கனா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் பா.ஜ.க தேர்தல் அறிக்கை குறித்து விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதளபதிவில், ”2004 ஆம் ஆண்டு பா.ஜ.க வெளியிட்ட 'ஒளிரும் இந்தியா' தேர்தல் அறிக்கையை மக்கள் நிராகரித்ததுபோல் இம்முறையும் 'வளர்ந்த இந்தியா' தேர்தல் அறிக்கையை மக்கள் நிராகரிப்பார்கள். பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை என்பது தோல்வியடைந்த வங்கியில் எடுக்கப்பட்ட செல்லா காசோலை.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!