India
சக கலைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் : போதைமருந்து கொடுத்து நடந்த கொடூரம் !
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான பெண் ஒருவர் மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சம்பத்தில் ஒரு நிகழ்ச்சி குழு ஒன்றில் இணைந்துள்ளார். அதன்பின்னர் சில நிகழ்ச்சிகளுக்கு சென்றுவந்துள்ளார்.
இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சத்தீஸ்கரில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள விஷ்ராம்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக வந்துள்ளார். ஆனால், எதிர்பாராத காரணங்களால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து காரில் தனது சக ஆண் கலைஞர்கள் மூன்று பேரோடு ஹுசைனாபாத் என்ற பகுதியில் நடைபெறும் வேறொரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்த அந்த நபர்கள், அந்த இளம்பெண்ணுக்கு அவருக்கு தெரியாமல் போதை மருந்தை கொடுத்துள்ளனர்.
இதில் அந்த பெண் நினைவிழந்த நிலையில், அந்த மூன்று ஆண் கலைஞர்களும் காரில் வைத்தே அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மயக்க நிலையில் இருந்த அப்பெண்ணை சாலையின் அருகே விட்டுவிட்டு அந்த மூன்று பெரும் தப்பியுள்ளனர்.
பின்னர் இது குறித்து அங்கிருந்தவர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்த போலிஸார், அந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இந்த செயலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் ஒருவரை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !