India

ஓட்டுநர் இல்லாமல் 70 கி.மீ ஓடிய ரயில் : பெரும் விபத்து தவிர்ப்பு - நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீரிலிருந்து 53 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் பஞ்சாப் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் கதுவாவி ரயில் நிலையத்திற்கு வந்த போது ஓட்டுநர், ஹேண்ட் பிரேக் போடாமல் ரயிலை நிறுத்தி கீழே இறங்கியுள்ளார்.

பின்னர் சில நிமிடங்களிலேயே ஓட்டுநர் இல்லாமல் ரயில் தானாகவே பயணிக்கத் தொடங்கியது. இதையடுத்து ரயிலை நிறுத்த ஊழியர்கள் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் சரக்கு ரயில் 70 கி.மீ பயணித்து பஞ்சாபின் கோஷியார்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது மரக்கட்டைகளைத் தண்டவாளத்தில் வைத்து ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சரக்கு ரயில் வந்த தண்டவாளம் வழியாகப் பயணிகள் ரயில் எதுவும் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சகம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

Also Read: தடுப்புச் சுவர் மீது மோதி நொறுங்கிய கார் : உயிரிழந்த MLA - தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!