India
2 ஆண்டில் வெறும் 32 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை : இதுதான் குஜராத் மாடலின் லட்சணம்!
குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க ஆட்சியில் எத்தனை இளைஞர்களுக்கு அரசுப் பணி கிடைத்துள்ளது என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.
இதற்கு தொழில்துறை அமைச்சர் பல்வந்த்சிங் ராஜ்புட் அளித்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் 29 மாவட்டங்களிலிருந்து 2,38,978 பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலைக்காகப் பதிவு செய்துள்ளனர்.
இதில் ஆனந்த் மாவட்டத்தில் 21,633 பேரும், வதோராவில் 18,732 பேரும், அகமதாபாத்தில் 16,400 பேரும் பதிவு செய்துள்ளனர். இத்தனை லட்சம் பேர் அரசு வேலைக்காகப் பதிவு செய்துள்ள நிலையில் கடந்த 2 ஆண்டில் வெறும் 32 இளைஞர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகச் சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பா.ஜ.க அரசுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். குஜராத் மாடல்தான் இந்தியாவிற்கே வழிகாட்டி என்று பிரதமர் முதல் பா.ஜ.க தொண்டர்கள் வரை பெருமை பேசிவந்த நிலையில் அந்த மாடலின் லட்சம் குஜராத் சட்டமன்றத்திலேயே அம்பலமாகியுள்ளது.
அதேநேரம் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில் 2022 -2023 ஆம் ஆண்டில் மட்டும் 1.19 லட்சம் மாணவர்கள் பணி ஆணை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் குஜராத் மாடலுக்கும் திராவிட மாடலுக்கும் உள்ள வித்தியாசம்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!