India
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றால் போராட்டம் தீவிரமடையும்: பாஜக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
இதற்காக, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்கு வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர். விவசாயிகளின் பேரணி டெல்லி செல்வதைத் தடுக்க டெல்லி எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி எல்லைகளில் கன்டெய்னர்கள், போலீஸ் வாகனங்கள், ராட்சத கான்கிரீட் சுவர்கள் வைத்துத் தடுப்புகள் அமைக்கப்பட்டு சுற்றிலும் முள்வேலிகள் போடப்பட்டுள்ளன.
விவசாயிகளின் வாகன டயர்களை பழுதுப்படுத்தும் வகையில் தரையில் ராட்சத ஆணிகள் அடித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகளின் வாகனங்களை எதிர்த்துச் சென்று டயர்களை குத்திக் கிழித்து விட்டுத் திரும்பும் எந்திரங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய பா.ஜக அரசு மேற்கொண்டு இருந்தாலும் தடுப்புகளை தகர்த்தெறிந்து விவசாயிகள் முன்னேறி வருகிறார்கள்.
இதையடுத்து முன்னேறி வரும் விவசாயிகள் மீது ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி வருகிறது. இன்று மூன்றாவது நாளாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒன்றிய அரசு விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு இன்று அழைத்துள்ளது. இதையடுத்து இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் இன்றும் போராட்டம் தீவிரமடையும் என்று ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து விட்டுத் தொடர்ந்து விவசாயிகள் மீது ஒன்றிய அரசு நயவஞ்சகத்துடன் தாக்குதல் நடத்தி வருகிறது.
Also Read
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!