India
தகர்த்தெறியப்பட்ட தடுப்புகள் : டெல்லிக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் - விவரம் என்ன ?
ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு வருடத்திற்கு மேலாக கடும் குளிர், மழை, தடியடி, உயிரிழப்புகள் என அனைத்தையும் தாங்கி ஒன்றிய அரசை தங்களது கோரிக்கைக்குப் பணியவைத்தார்கள் விவசாயிகள்.
அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை. அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய திட்டமிட்டுள்ளனர், இந்த சூழலில் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், போலீசார் சாலைகளில் ஆணி அடித்து தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஹரியானா, உத்திரபிரதேச விவசாயிகள் அரியானா வழியாக டெல்லிக்குள் நுழையாமலும் தடுக்க அந்த பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போலிஸார் வைத்திருந்த தடுப்புகளை தகர்த்தெறிந்து டெல்லிக்குள் நுழைந்துள்ளனர். விவசாயிகள் ஏற்கனவே 6 மாதத்துக்கு தேவையான உணவுப்பொருள்களை எடுத்து வந்துள்ளதாக பல்வேறு விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் இந்த போராட்டம் நீண்ட காலம் நடைபெறும் என ஒன்றிய அரசு அஞ்சியுள்ளது.
இதனிடையே விவசாயிகள் போராட்டத்தை தடுக்க பல்வேறு இடங்களில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலிஸார், விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். எனினும் அதற்கு சற்றும் அஞ்சாமல் விவசாயிகள் தொடர்ந்து டெல்லியை நோக்கி நகர்ந்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இந்த போராட்டம் ஒன்றிய பாஜக அரசை தூக்கி எரியும் என எதிர்பாக்கப்படுகிறது.
Also Read
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!
-
தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு!
-
“சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை” : தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
-
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் : ரூ4.12 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் அசத்தல்!