India
செத்த பூனையை கடித்துச் சாப்பிட்ட இளைஞர் : கேரளாவில் நடந்தது என்ன?
அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ஒருவர் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கேரளாவிற்கு வந்துள்ளார். பின்னர் பல நாட்களாகச் சாப்பிடாமல் சுற்றித் திரிந்துள்ளார்.
இந்நிலையில் கேரளாவின் குட்டிப்புரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் அசாம் இளைஞர் பசிதாங்க முடியாமல் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு செத்துப்போன பூனையின் உடல் ஒன்று இருந்துள்ளது.
இதைப்பார்த்த அவர் பசிக் கொடுமை தாங்காமல் அந்த பூனையின் உடலைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிட்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கிருந்த போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் அங்கு வந்த போலிஸார் அவருக்குச் சாப்பிட உணவு வழங்கினர். இதையடுத்து அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பிறகு அவரது உறவினர்களைத் தொடர்பு கொண்டு இளைஞரின் நிலையை எடுத்து கூறியுள்ளனர். அவர்களை கேரளாவிற்கு வரவைத்து அசாம் இளைஞரை போலிஸாரி ஒப்படைக்க இருக்கிறார்கள்.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?