India
தனிமையில் இருந்த வீடியோவை வைத்து மிரட்டல் : மாடலிங் பெண்ணை கொலை செய்த ஹோட்டல் உரிமையாளர் !
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் திவ்யா பகுஜா (வயது 27). மாடல் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் அங்குள்ள விளம்பர நிகழ்வுகள் மற்றும் சிறிய அளவிலான நிகழ்ச்சிகள் தொகுப்பாளராக பங்கேற்று வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிஜீத் சிங் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அபிஜீத் சிங் சிட்டி பாயின்ட் என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார். இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காரணமாக இருவரும் அறை எடுத்து தங்கும் அளவு சென்றுள்ளனர்.
அங்கு இருவரும் தனிமையில் இருந்த வீடியோகளை அபிஜீத் சிங்குக்கு தெரியாமல் திவ்யா பகுஜா வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். அதோடு அந்த வீடியோக்களை காட்டி அபிஜீத் சிங்கை மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாத அபிஜீத் சிங் திவ்யா பகுஜாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி ஜனவரி 2 அன்று திவ்யாவை ஒரு பகுதிக்கு வரவழைத்த அவர் அங்கு வைத்து அவரை கொலை செய்துள்ளார். மேலும், 10 ஆளுக்கு 10 லட்சம் கொடுத்து தனது நண்பரகளான ஹேம்ராஜ், ஓம் பிரகாஷ், மேகா போகத், பால்ராஜ் கில் ஆகியோரின் உதவியோடு திவ்யாவின் உடலை அப்புறப்படுத்தியுள்ளார்.
இதனிடையே திவ்யா பகுஜா கொலை குறித்து விசாரணை நடத்திய போலிஸார், அபிஜீத் சிங்கை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை நடத்தியபோது அவர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அபிஜீத் சிங், ஹேம்ராஜ், ஓம் பிரகாஷ், மேகா போகத், பால்ராஜ் கில் ஆகியோரைக் போலிஸார் கைதுசெய்தனர். தனர்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!