India
உறவினரால் ரூ.2 லட்சத்துக்கு விற்கப்பட்ட சிறுமி : பாலியல் வன்கொடுமை செய்த தந்தை-மகன்.. நடந்தது என்ன ?
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கபீர்தான் மாவட்டத்தை சார்ந்த 16 வயது சிறுமி ஏழ்மை நிலையில் வசித்து வந்துள்ளார். அவரை அவரது உறவினர் ஒருவர் வேலைக்காக டெல்லிக்கு அழைத்துசென்றுள்ளார். அங்கு மோசமான முறையில் அவரை வேலை வாங்கியுள்ளார்.
பின்னர் வேறொருவருக்கு ரூ.2 லட்சத்துக்கு அந்த சிறுமியை விற்பனை செய்துள்ளார். அப்படி அந்த சிறுமி விற்பனை செய்தபின்னர் சிறுமியை வாங்கிய தந்தை மற்றும் மகனும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதோடு நிற்காத அவர்கள், அந்த சிறுமியை வீட்டு வேலைகளையும் செய்ய வைத்துள்ளனர். இதனிடையே இந்த பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான அந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. 5 வருடங்கள் இந்த கொடுமையை அனுபவித்த அந்த சிறுமி ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பியுள்ளார்.
பின்னர் தனது நேர்ந்த இந்த கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதலில் இந்த புகாரை ஏற்கமறுத்த போலிஸார், பின்னர் வழக்கு பதிவு செய்து சிறுமியை விற்பனை செய்த அவரது உறவினரை கைது செய்தனர்.
மேலும், சிறுமியை 5 வருடங்கள் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை , மகனை கைது செய்ய முயன்ற நிலையில், அவர்கள் தலைமறைவாகினர். அதனைத் தொடர்ந்து அவர்களை தேட தனி படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!