India
பெற்ற தாயை மின்சார கம்பத்தில் கட்டி வைத்த கொடூர மகன் : ஒடிசாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ஒடிசா மாநிலம், சரசபதி கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதா. 70 வயது மூதாட்டியான இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் சாரதா தனது மூத்த மகன் வீட்டில் வசித்து வந்தார்.
இதையடுத்து மூத்த மகன் கருணாவும் உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் சாரதா தனது இளைய மகன் சத்துருக்கன் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் மகனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் தாய் சாரதா சமைப்பதற்காக காலிபிளவர் பறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் தனது தாய் என்றும் பாராமல் அவரை அடித்து அங்கிருந்த மின் கம்பத்தில் கட்டி துவைத்துள்ளார்.
இதைத் தடுக்க முயன்ற அவரது மனைவியையும் சஸ்துருகன் அடித்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!
-
“தமிழ்நாட்டில் விலையும், கொலையும்தான் உயர்கிறது” : த.வெ.க அரசு மீது கனிமொழி எம்.பி தாக்கு!