India
தீபாவளியன்று கடத்தப்பட்ட பள்ளி மாணவன்.. சிறுநீர் கழித்து துன்புறுத்திய கும்பல்.. உ.பி-யில் தொடரும் அவலம்!
உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது மீரட். இங்கு அமைந்திருக்கும் பள்ளி ஒன்றில் அந்த பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சூழலில் தீபாவளி அன்று இரவு நேரத்தில், தனது வீட்டில் செய்யப்பட்ட பலகாரத்தை தனது உறவினர் வீட்டுக்கு ஒரு பாத்திரத்தில் வைத்து எடுத்து சென்றுள்ளார். இரவு நேரத்தில் இந்த மாணவர் மட்டும் தனியாக சென்றுள்ளார்.
இதனை கண்ட ஒரு கும்பல், மாணவரை பின்னிருந்து தாக்கி கடத்தியுள்ளது. பின்னர் மாணவரை ஒரு காட்டு பகுதி ஒன்றுக்கு கூட்டி சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து தங்கள் கால்களால் அவரது உடலில் சரமாரியாக மிதித்து தாக்கியுள்ளனர். அதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதில் இருந்த இளைஞர் ஒருவர், அந்த சிறுவன் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
இந்த கொடூரம் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சிறுவன் மீது தாக்குதல் நடத்திய கும்பலுக்கு வலுத்த கண்டனங்கள் எழுந்தது. தொடர்ந்து அந்த வீடியோ குறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் 3 பேவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!