India
பிறந்த நாளுக்கு துபாய் அழைத்து செல்லாத ஆத்திரம்: கணவன் மூக்கில் குத்திய மனைவி - அடுத்து நடந்த அதிர்ச்சி!
புனேவின் வானவ்டி பகுதியைச் சேர்ந்தவர் நிகில் கண்ணா. இவர் கட்டுமானத் துறையில் தொழிலதிபர். இவரது மனைவி ரேணுகா. இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்நிலையில் மனைவி தனது பிறந்த நாளை கொண்டாடத் துபாய்க்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் கணவர் நிகில் கண்ணா மறுத்துள்ளார். மேலும் அவரது பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த எந்த பரிசு எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை.
இதனால் கணவன் மீது ரேணுகா கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று இது குறித்து கணவனிடம் கேட்டுச் சண்டைபோட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தில் கணவன் மூக்கில் ஓங்கிக் குத்தியுள்ளார்.
இதில், கணவனின் மூக்கு உடைந்து அதிகமான ரத்தம் வெளியேறி மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மனைவி ரேணுகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!