India
இன்னும் 12 மீட்டர்தான் : உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 40 தொழிலாளர்களை நெருங்கிய மீட்பு படையினர் !
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இங்கு கடந்த 12-ந் தேதி சில்க்யாரா- தண்டல்கான் இடையே இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
இதில், சுரங்கத்துக்குள், 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த 41 பேரையும் மீட்க கடந்த 10 நாட்களாக பேரிடர் மீட்பு பணியினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த சுரங்கப்பாதையில் 6 அங்குல குழாய் அமைத்து, 10 நாட்களாக தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள், குடிநீர், ஆக்சிஜன் உள்ளிட்டவை அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், தற்போது சுரங்க பாதையில் சிக்கிய 41 பேர் குறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. உணவு பொருட்கள் அனுப்பப்படும் பாதை வழியே வாக்கி டாக்கி அனுப்பப்பட்ட நிலையில், அதன் மூலம் மீட்பு படையினர் அவர்களுடன் பேசி வருகின்றனர்.
அதோடு எண்டோஸ்கோபி கேமராவை அனுப்பி அதன் மூலம் உள்ளே இருக்கும் தொழிலாளர்கள் குறித்து வீடியோ காட்சியும் இன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், விரைவில் மீட்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், உள்ளே இருக்கும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேச உதவும் வகையில், செல்போன்களை அனுப்ப மீட்புக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது அந்த தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவர் என்பதற்கு அறிகுறி என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர்களை மீட்பதற்கான கருவிகளை சம்பவ இடத்துக்கு கொண்டுவர தாமதம் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களை மீட்பதில் காலதாமதம் ஆவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலயில், தற்போது மீட்பு பனி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சுரங்கப்பாதையில் இன்னும் 12 மீட்டர் துளையிடும் பணி மீதமுள்ள நிலையில், தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவர் என மீட்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்படி மீட்கப்படும் தொழிலாளர்களை விரைவில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்ப சுரங்கப்பாதையின் வெளியே ஏராளமான ஆம்புலன்சுகளும் தயார் நிலையில் உள்ளன.
Also Read
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !
-
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : 13 அரசுத்துறைகள்.. குவிந்த பொதுமக்கள்.. தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!