India
உலகக் கோப்பை இறுதிப்போட்டி - TV-யை ஆப் செய்த மகன் : தந்தை செய்த கொடூரச் செயல் - உ.பியில் பகீர்!
இந்தியா - ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஒட்டுமொத்த நாடே பார்த்துக் கொண்டிருந்தபோது உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் கணேஷ் பிரசாத். இவரது மகன் தீபக். இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியை டிவி-யில் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது மகன், தந்தையிடம் இரவு உணவைச் சமைத்துவிட்டு பின்னர் கிரிக்கெட் பார்க்கும்படி கூறியுள்ளார். ஆனால் கணேஷ் தொடர்ந்து டிவியை பார்த்துக் கொண்டிருந்தார்.
இதனால் கோவமடைந்த மகன் டி.வியை ஆப் செய்துள்ளார். இதில் தந்தை மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தந்தை கணேஷ் வீட்டிலிருந்த செல்போன் சார்ஜ் வயரை எடுத்து மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மகன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த தந்தை கணேஷை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து மேலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!