India
இஸ்லாமிய இளைஞர்களை கட்டிவைத்து தாக்கிய குஜராத் போலீசார் : சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு !
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் பாஜக நீண்ட நாள் ஆண்டுவரும் மாநிலமும், மோடியின் சொந்தமாநிலமுமாக குஜராத்தில் கடந்த ஆண்டு நடந்த கொடூர சம்பவம் தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள உந்தேலா கிராமத்தில் மூன்று இளைஞர்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கல் எறிந்ததாக கூறி, அவர்கள் மூன்று பேரையும் பொதுவெளியில் ஒரு கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் லத்தியைக் கொண்டு அடிப்பது சித்திரவதையாகாது என்றும், தாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் சம்பவத்தில் ஈடுபட்ட போலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தது சர்ச்சையானது. இந்த வழக்கில் போலீசாரின் குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நான்கு போலீஸாருக்கு 14 நாட்கள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம் இந்த தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !
-
முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைது : இலங்கையில் நடப்பது என்ன?
-
ரம்மியை ஆதரித்த ஆர்.என்.ரவி இப்போது எங்கே போனார்? : முரசொலி சரமாரி கேள்வி!
-
"Likes கெத்து இல்லை! Marks, Degrees- தான் உண்மையான கெத்து" - மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை !
-
“தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் விவரம் என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!