India
விளையாட அழைத்த பக்கத்து வீட்டுக்காரர்.. ஆசையாக சென்ற 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் !
மத்திய பிரதேச மாநிலம் ஹனுமங்கஞ்ச் என்ற நகரில் 6 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது இந்த குடும்பத்துடன், அவரது பக்கத்துக்கு வீட்டுக்காரர் செளகத் கான் (52) என்பவர் நன்றாக பேசியுள்ளார். மேலும் சிறுமியிடம் விளையாடியும் வந்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு அந்த நபரை பிடித்து போயுள்ளது.
எனவே சிறுமியுடன் செளகத் கான் அடிக்கடி விளையாடி வந்துள்ளார். இந்த சூழலில் சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் இங்கு வந்த அந்த நபர், சிறுமியிடம் தனது வீட்டுக்கு விளையாட அழைத்துள்ளார். மேலும் தனது வீட்டில் நிறைய பொம்மைகள், வீடியோ கேம் உள்ளிட்டவை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சிறுமியும் விளையாடுவதற்காக ஆசையாக சென்றுள்ளார். அப்போது செளகத் கான், அந்த சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டு வன்கொடுமையும் செய்துள்ளார். இதனால் பயந்த அந்த சிறுமியிடம் வெளியில் சொல்லக்கூடாது என்று கண்டிப்பாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்த சிறுமி, இதனை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து மறுநாள் சிறுமிக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது.அதோடு வயிறு வலி என்று சிறுமி அழுதுள்ளார். இதனால் மருத்துவமனைக்கு சிறுமியை பெற்றோர் கூட்டி சென்றுள்ளனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ந்த பெற்றோர், இதுகுறித்து சிறுமியிடம் பொறுமையாக கேட்டுள்ளனர்.
அப்போது பக்கத்து வீட்டு மாமாதான் இதனை செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து செளகத் கான் மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அவர்கள் குற்றம்சாட்டப்பட்ட செளகத் கானை அதிரடியாகி கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!