India
பாஜக ஆட்சியில் தலைதூக்கும் துப்பாக்கி கலாசாரம்.. ம.பியில் சட்ட விரோதமாக நடந்து வந்த ஆயுதக் கிடங்கு!
மத்திய பிரதேச மாநிலம் தார் பகுதியில் சட்ட விரோதமாக ஆயுதக் கிடங்கு செயல்பட்டு வருவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தார் பகுதி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலிஸார் சோதனை செய்தனர்.
அப்போது, 36 லட்சம் மதிப்பில் 150க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் இருந்ததைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்கு இருந்த மூன்று பேரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஆயுதக்கிடங்கில் இருந்த துப்பாக்கிகளை போலிஸார் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக ஆயுதக்கிடங்கு நடத்தி வந்த கும்பலுக்கு ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தீவிரமாக போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
18 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் இம்மாநிலத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த ஆயுதக் கிடங்கிலிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க துப்பாக்கி கலாசாரத்தை உருவாக்கப்பாக்கிறதா? என எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏதாவது சதி வேலைகளுக்காக இந்த ஆயுதக்கிடங்கு செயல்பட்டு வந்ததா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!