India

காணாமல் போன கோடி மதிப்புள்ள வைரக்கல்.. வைர வியாபாரியால் தேடி திரிந்த மக்கள்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட் !

பொதுவாகவே தங்கம், வைரம் என விலையுயர்ந்த பொருட்கள் மக்கள் மத்தியில் இன்றளவும் பெரிய பொக்கிஷம் போல் பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் குஜராத்தில் வைர வியாபாரி ஒருவரது கோடிக்கணக்கான மதிப்புள்ள வைர கற்கள் கீழே விழுந்ததாக பரவிய செய்தியை அடுத்து மக்கள் அதனை தேடி திரிந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் என்ற நகரம் இந்தியாவின் வைரத்தின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வரச்சா (Varachha) என்ற பகுதியில் வைர வியாபாரி ஒருவர் தன்னிடம் இருந்த மினுமினு கற்களை கீழே தவறவிட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அதனை தேடியுள்ளனர். அவ்வாறு தேடும்போது, அருகில் இருந்த மற்ற சிலர் என்ன என்று கேட்டுள்ளனர். அப்போது வைர வியாபாரியின் கோடிக்கணக்கான மதிப்பிலான வைரக் கற்கள் கீழே விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தெருவில் வருகிறவர்கள், போகிறவர்கள் என பலரும் அந்த கற்களை தேடியுள்ளனர். தீவிர்மாக தேடியும் வைரக் கற்கள் கிடைக்கவில்லை. இதையடுத்தே அவர்களுக்கு தெரியவந்துள்ளது, மக்கள் தேடி அலைந்தது வைரக்கற்கள் அல்ல என்று. அதாவது அந்த கற்கள் சேலை மற்றும் கவரிங் நகைகளுக்கு பயன்படுத்தப்படும் அமெரிக்க வைரம் எனப்படும் விலைக்குறைந்த கற்கள் என்று தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் வைரக்கற்களை தேடி அலைந்த மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, இதுகுறித்த வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவுக்கு பலரும் பல வித கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “மோடி சொல்லட்டும்.. நா என் அப்பா ரோட்டுலதான் ஓட்டுறேன்” - போலீசிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண்: பின்னணி?