India
எங்கும் திராவிட மாடல்.. தெலங்கானா தேர்தல் : 6 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த காங்கிரஸ் கட்சி!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட மாபெரும் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களைத் தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதில் இருந்தும் பாராட்டுகள் பெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து திராவிட மாடல் திட்டங்களின் வெற்றிகளைப் பார்த்த மற்ற மாநில அரசுகளும் தங்களது மாநிலங்களில் அறிவித்து அமல்படுத்தத் தொடங்கியுள்ளன. கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இலவச பேருந்து பயணத் திட்டங்கள் அறிவித்து அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மகளிருக்கு உரிமைத் தொகை திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தெலங்கானா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாகத் திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பின்பற்றி அறிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் காங்கிரஸ் கட்சியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு 6 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
1. மகளிர் நலனுக்காக மகாலட்சுமி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.2500 நிதி உதவி வழங்கப்படும்.
2. சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ. 500 மானியம் மாதந்தோறும் வழங்கப்படும்.
3. TSRTC இல் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.
4. நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகை தாரர்களுக்கு ரூ. 15,000 / ஏக்கர் / ஆண்டு.
5. விவசாய கூலியாட்களுக்கு ஆண்டுக்கு ரூ. 12,000.
6. குறைந்தபட்ச ஆதார விலை விட ரூ. 500 / குவிண்டால் நெல்லுக்கு கூடுதல் உள்ளிட்ட ஆறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் திராவிட மாடல் திட்டங்களே அனைவருக்கும் வழிகாட்டி வருகிறது என்பதையே காங்கிரஸ் கட்சியின் அறிவிப்புகள் அறிவுறுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!