India
பறக்கும் விமானத்தில்.. தூங்குவது போல் நடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் : கொத்தாக தூக்கிய போலிஸ் !
மும்பையில் இருந்து கெளகாத்திக்கு நாள்தோறும் இண்டிகோ விமானம் சென்று வருகிறது. இந்த விமானத்தில் நாள் ஒன்றுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் 6E-5319 என்ற விமானம் தினமும் இரவு 9 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படுவது வழக்கம். அதன்படி கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் இந்த விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டுள்ளது. இதில் பலரும் பயணித்துள்ளனர்.
இந்த சூழலில் விமானம் புறப்பட்டதும் அனைவரும் தூங்க வேண்டும் என்பதால் அங்கிருந்த மின் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டது. அப்போது பெண் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது இருக்கைக்கு அருகே இருக்கும் நபர் ஒருவர், அந்த பெண் மீது கை போட்டுள்ளார். இதனால் சட்டென்று அந்த பெண் விழித்து பார்த்தபோது, அந்த நபர் உறங்கி கொண்டிருந்துள்ளார்.
பின்னர் அவர் கையை நகர்த்தி வைத்து விட்டு, இவர் மீண்டும் தூங்கியுள்ளார், அப்போதும் அந்த நபர் கை போட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், தூங்குவது போல் தனது கண்களை பாதி மூடியிருந்தபோது அந்த நபர் வேண்டுமென்றே அந்த பெண் மீது கை போட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கையும் களவுமாக பிடித்த அந்த பெண், கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து வந்த ஊழியர்கள் விசாரித்தபோது, பாதிக்கப்பட்ட பெண் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். மேலும் தான் சிகிச்சை பெற்று விட்டு கெளகாத்தி சென்று கொண்டிருப்பதாகவும், தனது அருகே இருந்த அந்த நபர் தூங்குவது போல் நடித்து தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட அந்த நபரை கெளகாத்தி விமான நிலையம் வந்ததும், அங்கிருந்த போலீசாரிடம் விமான ஊழியர்கள் ஒப்படைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததாக போலீசில் ஒருவர் சாட்சியாக கூறியுள்ளார். இந்த நிகழ்வை பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”பாஜகவின் ஊதுகுழலாக உள்ள பழனிசாமியை 2026ல் மக்கள் அடித்து விரட்டுவார்கள்” : அமைச்சர் ராஜேந்திரன் உறுதி!
-
மருத்துவ படிப்பில் சேர 72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?
-
”அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து கிடக்கும் எடப்பாடி பயனிசாமி” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?