India
”பள்ளி மாணவர்கள் மனதில் விஷத்தை விதைக்கும் பா.ஜ.க”.. உ.பி சம்பவத்தை குறிப்பிட்டு ராகுல் காந்தி கண்டனம்!
உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இம்மாநிலத்தில் தொடர்ச்சியாக இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதல் மற்றும் வெறுப்பு பேச்சு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பள்ளி ஒன்றில் ஆசிரியரே இந்து மாணவர்களிடம் இஸ்லாமிய மாணவனை தாக்கச் சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அந்த வீடியோவில், இஸ்லாமிய மாணவர் ஒருவர் நிற்கிறார். அந்த மாணவரை அடிக்குமாறு ஆசிரியர் கூறியவுடன் முதலில் ஒரு சிறுமி அந்த மாணவரை அடிக்கிறார். அதன்பின்னர் அடுத்தடுத்து பிற மாணவர்கள் அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் முசாபர் நகரில் செயல்பட்டுவரும் பள்ளி ஒன்றில் நடந்துள்ளது. இஸ்லாமிய மாணவரை அடிக்குச் சொல்லும் ஆசிரியர் பெயர் திருப்தா தியாகி. மாணவர்கள் மத்தியில் வெறுப்பைப் பரப்பும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி, "அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து, பள்ளி போன்ற புனித இடத்தை வெறுப்பின் சந்தையாக மாற்றுவது - இதைவிட மோசமான ஒரு ஆசிரியரால் நாட்டிற்கு எதுவும் செய்ய முடியாது.
இதே மண்ணெண்ணையைத்தான் பாஜகவினர் பரப்பி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தீக்கிரையாக்கியுள்ளனர். குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம் - அவர்களை வெறுக்காதீர்கள், நாம் அனைவரும் சேர்ந்து அன்பைக் கற்பிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !