India
"இஸ்லாமிய மாணவரை அடியுங்கள்".. மாணவர்களுக்கு உத்தரவிட்ட பள்ளி ஆசிரியர்.. பாஜக ஆளும் உ.பி-யில் அதிர்ச்சி !
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளியில் இந்து மாணவர்களிடம் இஸ்லாமிய மாணவனை தாக்கச்சொல்லும் ஆசிரியரின் வீடியோ வெளியாகியுள்ளது.
நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்று தமிழ்நாடு அரசு கிடைத்ததால் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார்.
அதன்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.9.2022 அன்று தொடங்கி வைத்து, மாணவர்களுடன் உணவருந்தினார்.
அதனைத் தொடர்ந்து இன்று இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 17 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவுபடுத்தினார்.
இப்படி தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் முன்னோக்கி செல்லும் நிலையில், உத்தர பிரதேச மாநிலத்திலோ பாஜகவின் மதவாத ஆட்சியில் அம்மாநில கல்வித்துறை மோசமான நிலைக்கு சென்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகரில் செயல்பட்டுவரும் பள்ளி ஒன்றில் திருப்தா தியாகி என்ற ஆசிரியர் அங்குள்ள இந்து மாணவர்களிடம் இஸ்லாமிய மாணவனை தாக்கச்சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், இஸ்லாமிய மாணவர் ஒருவர் அங்கு நிற்கும் நிலையில், அந்த மாணவரை அடிக்குமாறு அங்குள்ள மாணவர்களை அந்த ஆசிரியர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து முதலில் ஒரு சிறுமி அந்த மாணவரை அடிக்க அதன்பின்னர் ஆசிரியர் கூறியபடி பிற மாணவர்களும் வந்து அந்த இஸ்லாமிய மாணவனை தாக்கியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
Also Read
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!