India
சந்திரயான் 3-க்கு உதவும் சந்திரயான் 2 ஆர்பிட்டர்.. வெற்றிகரமாக இணைக்கப்பட்ட தொடர்பு.. மகிழ்ச்சியில் ISRO!
நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. குறைத்த செலவில் செய்யப்பட்ட இஸ்ரோவின் இந்த சாதனையை பல்வேறு உலகநாடுகளும் பாராட்டின. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.
அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.
அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரயான் - 3 விண்கலத்தில் இருக்கும் விக்ரம் என்ற லேண்டர் வரும் 23ம் தேதி மாலை 5.30 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என கூறப்பட்டிருந்தது. தற்போது 6.03 மணியளியில் விக்ரம் நிலவில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே 'சந்திரயான் 2' மூலம் நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட ஆர்பிட்டர் மற்றும் 'சந்திரயான் 3' மூலம் கொண்டுசெல்லப்பட்ட விக்ரம் லேண்டர் ஆகியவை தொடர்பு கொண்ட செய்தியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 'Welcome, buddy!' என்ற மெசேஜ் மூலம் இந்த இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் போது முக்கியமான தகவலை பூமிக்கு அனுப்பவும், தொலைத்தொடர்பு ரீதியாக விக்ரம் லேண்டருக்கு 'சந்திரயான் 2' விண்கலத்தில் ஆர்பிட்டர் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தற்போது தரையிறங்கும் பகுதியை வரைபடமாக்கி படங்களை எடுத்து விக்ரம் லேண்டர் பூமிக்கு அனுப்பி வருவதாகவும், இந்த கேமரா மூலம் அனுப்பப்படும் படங்களை இஸ்ரோ ஆய்வு செய்து பாதுகாப்பாக தரையிறங்கும் பகுதியை கணடறிய முடியும் என்றும் இஸ்ரோ சார்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!